Tuesday, October 12, 2010

திருநெல்வேலி நடவடிக்கை

விட்டு விடுவதற்கில்லை, சீலன் ஆனந்த் உயிர் இயற்கையில் கரைவதற்குள் பதிலளித்தாக வேண்டும். செல்லக்கிளி, கிளி பறந்து வந்தது, கூடவே அவருடைய படை பிரிவினர். புலனாய்வு பிரிவினர் தட்டி விடப்பட்டனர். பதில் கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் திருநெல்வேலி. கோபம் குறைய வில்லை, சற்றும் அணையாத தீ, உள்ளுக்குள் கனன்ற பெரு நெருப்பு, சீலனை... இழந்த ஆவேசம்.புறப்பட்டார்.தலைவர்,உடன் செல்லக்கிளி,விக்டர்,சந்தோசம்,குமரப்பா,புலேந்திரன்,கிட்டு உள்ளிட்ட பதினான்கு பேர் கொண்ட குழு. தலைவரே நேரடியாக களம் இறங்கினாலும் இந்த திட்டத்துக்கு செல்லக்கிளிதான் கமாண்டர். இருள் மூடிய வானம், பொதுமக்களுக்கு விஷயம் மறைமுகமாக சொல்லப்பட்டிருந்தது. சாலையில் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டன. பதினான்கு பெரும் நிலையெடுத்து சாலையின் இருபுறமும் ஆங்காங்கே வீடுகளில் பின்னால், மறைவில் பதுங்கி நின்றனர். ரோந்து வரும் ராணுவ கவச வாகனத்துக்கு கண்ணிவெடி, ஜீப்பில் வருபவர்களுக்கு துப்பாக்கிகுண்டுகள் பரிசாக கொடுப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. செல்லக்கிளி அவசரப்பட்டு ஜீப் வரும் போது விசையை அழுத்த ஜீப் துக்கிஎரியப்பட்டது. அதில் இருந்தவர்கள் அடுத்தகணமே இறந்தார்கள்.பின்னால் வந்த கவச வாகனத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிசூடு ஆரம்பமானது. எந்த பக்கத்தில் இருந்து யார் தாக்குகிறார்கள் என்று சுதாகரிப்பதர்க்குள்ளாகவே நான்கு உடல்கள் சிதறி விழுந்தன. தலைவர் நிதானம் தவறாமல் தன்னுடைய G 3 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருந்தார். ஒன்பது குண்டுகள், ஒன்பது உடல்கள். தலைவரின் போர்த்திறனை போராளிகள் களத்தில் நேரடியாக கண்டனர், அசந்து போனார்கள் குமரப்பா, கிட்டு, விக்டர் போன்றோர். உக்கிரமான தலைவரின் தாக்குதலில் 13 சிங்கள காடையர்கள் செத்து ஒழிந்தனர். கமாண்டர் செல்லக்கிளி மாவீரர் ஆனார். 13 சிங்கள காடையர்கள் செத்து ஒழிந்தனர். அது ரிச்சர்ட் ஜெயவர்த்தனேவை அதிர செய்தது

சீலன்

ஊர் ஊராக ராணுவ ட்ரக்குகள் போகும். இறங்கி எதிர் படுபவர்களை பிடித்து விசாரிப்பார்கள். அடித்து துவைத்து தூக்கி போடுவார்கள். தினசரி நடக்கும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாள் தவறாமல் இது நடந்தே தீரும். அப்படித்தான் மீசாலை கிராமத்துக்கு ராணுவம் போனது. இரண்டு ஜீப்புகள், ஒரு மினி பஸ், பின் தொடரும் ஒரு பெரிய ராணுவ ட்ரக் நிறைய வீரர்கள். அனைவரிடமும் ஆயுதங்கள்.
சுற்றி வளைத்து நின்றவர்கள் மத்தியில் நான்கு போராளிகள் மாட்டிக்கொண்டார்கள். அதுவும் பதுங்க வழியில்லாத வெட்டவெளி பிரதேசம். உக்கிரமான சண்டை, வீரம் செறிந்த சண்டை. நான்கு பேருக்கும் நூறு பேருக்கும் இடையேலான சண்டை. இரண்டு போராளிகள் தப்பித்தார்கள், இரண்டு பேர் இறந்தார்கள். அதுவும் சிங்கள வீரர்களால் அவர்கள் உயிர் துறக்க வில்லை. குண்டடிபட்டிருந்தது, ஓட
முடியாது என்று தெரிந்து,எதிரியிடம் நாங்கள் மாட்டிவிடக்கூடாது, எங்களை சுட்டு விடுங்கள் என்று கேட்டு சக போராளிகளால் சுடப்பட்டு இறந்து மாவீரர் என்ற அழியா புகழ் பெற்றனர். சுட்டவர்களின் முகமெல்லாம் கண்ணீர், சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை. மாவீரர் ஆன அந்த போராளிகள் ஒருவர் பெயர் ஆனந்த், இன்னொருவர் சீலன் என்ற சார்லஸ் அந்தோணி.
தியாகம் என்றால் புலிகள் தான்
புலிகளை மிஞ்ச எவனும் இல்லை.

Monday, October 11, 2010

ஆயுத கப்பல்

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை ஆயுத கொள்முதல் செய்வது என இயக்கம் முடிவு செய்தது.அதன் படி ஏராளமான நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கண்ணிவெடிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் என கப்பலில் சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வந்தபோது சிக்கல் வந்தது. புலனாய்வு அதிகாரிகள் மோப்பம் பிடித்து விட்டால், எல்லாம் வீணாகி விடும். தலைவர் யோசித்தார்,
அண்ணன் பாலசிங்கத்தை அழைத்தார். அண்ணா நீங்கள் முதலமைச்சரிடம் விசயத்தை சொல்லுங்கள், எதையும் மறைக்க வேண்டாம், நமது ஆயுத கப்பல் வந்திருக்கிறது. சேதாரமில்லாமல் நமக்கு சரக்கு கிடைத்தாக வேண்டும், அவர்தான் உதவ வேண்டும், அவரால் மட்டுமே முடியும். இப்போதும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் தான் உதவினார். சற்றும் சலனம் இல்லை, பரபரப்பில்லை. ஒரு ஈ , எறும்புக்கு கூட விஷயம்
தெரியாது. ஒரே ஒரு போன் கால், யாருக்கு போன் செய்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆயுதங்கள் அனைத்தும் அலுங்காமல்,குலுங்காமல் திருவான்மியூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தன.
அதுதான் எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர்,
அவருடைய பலம் அப்படி
அந்த மாமனிதரோடு இருந்தவர்கள் பாக்கியவான்கள்

1983

1983 என்பது ஈழ தமிழர்களை பொறுத்தவரை தேவதைகளாலும், சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள், திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள், வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது,தொழில் போனது.உறவுகள்,தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி
அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.

ஆவரோ

தமிழர்களை புழு பூச்சிக்கு அளவுக்கு கூட மதிக்காத இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்பு சட்டம் 1978 செப்டம்பர் 7 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என்று அரசியல் கட்சியினர், போராளி இளைஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தலைவர் அதற்குள் காரியத்தை செய்தே விட்டார். ஏர்
லங்காவுக்கு சொந்தமான ஒரு ஆவரோ விமானம் பயணிகள் இறங்கும் வரை பொறுத்திருந்து விட்டு வெடிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பி பார்க்க செய்தார். இது பேசும் இயக்கமல்ல, செய்யும் இயக்கம் என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான்.

Saturday, October 9, 2010

சுவடுகள்

தனக்காக மட்டும் வாழும் மனிதர்களை, கால வெள்ளம் சுவடுகள் அற்றுப்போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் நிற்கிறது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி தமிழக வரலாற்றிலிருந்து ஒரு மனிதரை மறக்கவோ, மறைக்கவோ முடியாது. அவர்தான் மக்களால் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட சென்னை மெரினாவில்
சந்தனப்பேளையில் ஓய்வில் இருக்கும் பொன்மனச்செம்மல் டாக்டர். எம்.ஜி.ஆர்.