ஊர் ஊராக ராணுவ ட்ரக்குகள் போகும். இறங்கி எதிர் படுபவர்களை பிடித்து விசாரிப்பார்கள். அடித்து துவைத்து தூக்கி போடுவார்கள். தினசரி நடக்கும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாள் தவறாமல் இது நடந்தே தீரும். அப்படித்தான் மீசாலை கிராமத்துக்கு ராணுவம் போனது. இரண்டு ஜீப்புகள், ஒரு மினி பஸ், பின் தொடரும் ஒரு பெரிய ராணுவ ட்ரக் நிறைய வீரர்கள். அனைவரிடமும் ஆயுதங்கள்.
சுற்றி வளைத்து நின்றவர்கள் மத்தியில் நான்கு போராளிகள் மாட்டிக்கொண்டார்கள். அதுவும் பதுங்க வழியில்லாத வெட்டவெளி பிரதேசம். உக்கிரமான சண்டை, வீரம் செறிந்த சண்டை. நான்கு பேருக்கும் நூறு பேருக்கும் இடையேலான சண்டை. இரண்டு போராளிகள் தப்பித்தார்கள், இரண்டு பேர் இறந்தார்கள். அதுவும் சிங்கள வீரர்களால் அவர்கள் உயிர் துறக்க வில்லை. குண்டடிபட்டிருந்தது, ஓட
முடியாது என்று தெரிந்து,எதிரியிடம் நாங்கள் மாட்டிவிடக்கூடாது, எங்களை சுட்டு விடுங்கள் என்று கேட்டு சக போராளிகளால் சுடப்பட்டு இறந்து மாவீரர் என்ற அழியா புகழ் பெற்றனர். சுட்டவர்களின் முகமெல்லாம் கண்ணீர், சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை. மாவீரர் ஆன அந்த போராளிகள் ஒருவர் பெயர் ஆனந்த், இன்னொருவர் சீலன் என்ற சார்லஸ் அந்தோணி.
தியாகம் என்றால் புலிகள் தான்
புலிகளை மிஞ்ச எவனும் இல்லை.
No comments:
Post a Comment