Wednesday, October 6, 2010

குமரப்பா - புலேந்திரன்

இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் நம்பிக்கை வைத்து போராளிகள் தமிழகத்தில் இருந்து ஈழம் சென்றனர். பதினேழு போராளிகள், அதில் இரண்டு பேர் வெகு முக்கியஸ்தர்கள், அவர்கள் குமரப்பா, புலேந்திரன். முல்லை தீவு அருகே இந்திய அமைதி படையால் கைது செய்யப்பட்டு , சிங்கள வெறியர்களிடம் ஒப்படைக்க கொழும்பு நோக்கி கொண்டு செல்லும் வழியில் பலாலி இராணுவமுகாமில் வைக்கப்பட்டனர்.
மாத்தையாவும், தேசத்தின் குரல் பாலசிங்கமும் நேரில் பலாலி ராணுவ முகாமில் சந்தித்தனர். பதினேழு நிமிடங்களுக்கும் குறைவு, பதினேழு புதிய சயனைடு குப்பிகள். பதினேழு உயிரற்ற உடல்கள். எமது தேசிய தலைவரின் ஆணையின் படி குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட போராளிகள் ஈழ கனவுகளுடன் தங்கள் வீரச்சாவை தழுவிக்கொண்டனர், எமது இயக்கத்தின் ரகசியம் காத்து மாவீரர் என்ற அழியா புகழ்
பெற்றனர். குமரப்பா, புலேந்திரன் வீரமரணம் எமது தேசிய தலைவரை பாதித்தது, ஈழத்தமிழர்கள் அத்தனை பேரையும் உலுக்கியது. மரணம் பரவாயில்லை, தோல்விகூட பரவாயில்லை, நம்பிக்கை மோசடியை காட்டிலும் குருரம் வேறில்லை. இந்தியா அந்த நம்பிக்கை மோசடியை செய்தது. அதற்க்கு ஒரு விலை வைத்தார் எமது தேசிய தலைவர், அது ?

No comments:

Post a Comment