Thursday, October 7, 2010

சந்தன பேழைகளே

தாயக கனவுகளுடன் சாவினை தழுவிய
சந்தன பேழைகளே! இங்கு
கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே?
உங்களை பெற்றவர், உங்களின் தோழிகள்,
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்கழல் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நன்றி : தமிழீழ பண்பாட்டுக்கழகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்

No comments:

Post a Comment