அக்டோபர் - 2 மகாத்மா காந்தி பிறந்தநாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உத்தமர் பிறப்பர், ஏகாப்பத்திய வெறி பிடித்தவர்களை எதிர்க்க அனைவரும் பயன்படுத்தும் ஒரு பெயர் மகாத்மா காந்தி. அதிகார திமிர் பிடித்த வெள்ளையர்களை வெளியேற்ற ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகரகம் என்று போராட்டங்களை அறிவித்த மகாத்மா காந்தி, நேதாஜியின்
வீரமரணத்திற்கு பிறகு, வெள்ளையனே வெளியேறு என்று முழக்கம் செய்தார்.
அகிம்சை என்பது வெல்லவே முடியாது என்று இறுமாப்போடு இருந்த வெள்ளையர்களை வெளியேற்ற அண்ணல் காந்தி கையில் எடுத்த ஒரு ஆயுதம். அந்த அகிம்சையைதான் அண்ணன் திலீபன், எங்கள் தலைவர் கரிகாலனுக்கு வழிகாட்டியான எமது ஈழ தேசத்தின் தாய் அன்னை பூபதி ஆகியோர் கையில் எடுத்து உண்ணாநோன்பு இருந்து வீர மரணம் அடைந்தனர்.
அறுபதாயிரம் இந்திய ராணுவத்தினர் நவகாளியில் நடந்த மத கலவரத்தை அடக்க முடியாமல் தோற்று திரும்பினர். அதே
நவகாளியில் கிராமம் கிராமமாக நடந்தே கடந்து பல லட்சம் முஸ்லிம்களையும் ஹிந்துக்களையும் அந்த 76 வயதுக் கிழவன் காப்பாற்றியதைப் பார்த்து, அதிகாரத் திமிர் பிடித்த மவுன்ட்பேட்டன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகும் எழுந்துநின்றது. அந்த காந்தியின் தேசம் இது. எங்கள் தமிழினத்தை அழிக்க ஜெயவர்தனேக்களுக்கு ராணுவ உதவி செய்த ராஜீவின் தேசமல்ல, சோனியாவின் தேசம் அல்ல, இந்தியன்
என்கிற போர்வையில் இருக்கும் அதிகார வர்க்கத்தின் தேசமல்ல.
தமிழ் உறவுகளுக்கு சொல்வோம் இந்தியர்கள் திசைமாறி பயணிக்கிறார்கள். மகாத்மா காந்தியின் கொள்கைகளை மறந்து விட்டனர் அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டது. இந்தியர்கள் மகாத்மா காந்தியின் புகைபடத்தை எடுத்துக்கொள்ளட்டும், நாம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை எடுத்துக்கொள்வோம், பயணிப்போம் நமது தேசிய தலைவர் சுட்டிக்காட்டும் வழியில்.
superb kalakkitinka specialy that 2 lines
ReplyDeleteஇந்தியர்கள் மகாத்மா காந்தியின் புகைபடத்தை எடுத்துக்கொள்ளட்டும், நாம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை எடுத்துக்கொள்வோம்,