ராஜீவ் காந்தி படுகொலையை விடுதலைப்புலிகள் செய்ய வில்லை என வாதிடுபவர்களும் உண்டு. விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்றே ஏற்றுக்கொள்வோம். ஆனால் படுகொலை சதியில் பங்கேற்றவர்கள் யார் யார் என கடந்த 18 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு இன்று வரை விடை இல்லை. விடை தேடும் நேர்மையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் நமது சந்தேகங்களை
வலுப்படுத்துகிறது. உண்மை நம்மை விடுவிக்கும். உண்மை தேடும் புதிய முயற்சிகளை அறிவார்ந்த தமிழ் சமுகம் அக்கறையுடன் மீண்டும் மேற்கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த இன அழித்தலுக்கு ஆளாகி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சில பரிகாரங்களை காலம் கடந்து நாம் செய்திட அந்த உண்மை உதவும்
அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்
No comments:
Post a Comment