இந்தியா வெறும் நாடல்ல, நாம் மகத்தானோர் நாகரிகம். ஆதிக்க வெள்ளத்தில் சுமார் 500 ஆண்டுகள் அமிழ்ந்து கிடந்த போதும் பண்பாட்டு நெறிகளை பாதிப்பின்றி பாதுகாத்த நிலம் இது. நீண்ட விடுதலைப்போராட்டத்தில் நாம் 1000 பேரைக்கூட இழக்க வில்லை. அறவழியில் போராடினோம் என்பது மட்டுமல்ல அதற்க்கு காரணம் நம்மை அடிமைபடுத்தியவர்கள் கொலை வெறியர்களாகவும், இன அழிப்பு செய்யும்
ராஜபக்சே போன்ற மாபாதகர்களாகவும் இருக்க வில்லை. 1000 பேரைக்கூட விடுதலைப்போராட்டத்தில் இழக்காத நாம் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களின் படுகொலைக்கும், 20 லட்சம் பேரின் இடப்பெயர்வுக்கும், ஒட்டு மொத்த இன அழித்தலுக்கும் கூட்டாளிகளாக நிற்கிறோம். மனிதகுலத்திற்கு எதிரான இச்செயலை நாம் நியாயபபடுத்துகிறோமா.
அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்
No comments:
Post a Comment