உயரம் சற்று மட்டும் தான், ஆனால் உறுதியான தேகம், எதையும் தாங்கும் என்பது போல. கையை பிடித்து குலுக்கும் போது லேசா வலித்த மாதிரி இல்ல, பலசாலி போலிருக்கிறது. ஆனால் முகத்தில் என்ன வசீகர புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி எதோ ஓன்று .
வயக்காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டு இருக்கிறார்கள் என்று பார்ப்பார். இருட்டில் தடவி பார்த்து செடியை உணர்ந்து, கிழங்கை தோண்டி எடுத்துக்கொள்வார். மேலும் நடந்து மிளகாய் தோட்டம் பக்கமாய் பொய் நாலைந்து பச்சை மிளகாய்களை பறித்துக்கொள்வார். எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் கிழங்கை கழுவி, கையாலேயே தோலை சீவி விட்டு பச்சையாக அப்படியே உண்பார், தொட்டுக்கொள்ள
பச்சை மிளகாய்.
தங்குமிடம் பெரும் பிரச்சனையாக இருந்தது. டீக்கடைகளின் பின்புறம், ரயில்வே லைன் ஓரத்து புதர் மறைவுகள், நண்பர்களின் வீடுகள், கோயில் திண்ணைகள், பள்ளிக்கூட திண்ணைகள், உலகம் உறங்கும் வரை விழித்திருந்து விட்டு ஒதுங்கி படுப்பார். ஊர் விழிப்பதற்கு முன் எழுந்து போய் விட வேண்டும் எந்த இடமானாலும் சரி. இதுதான் விதி, இதுதான் வாழ்க்கை. இதுதான் புறநாநூருகளை புரட்டி போட்ட
எமது தேசிய தலைவரின் ஆரம்ப கால இயக்க வாழ்க்கை.
அவரின் சரித்திரம் இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு தமிழர்கள் சுமந்து செல்வார்கள்.
No comments:
Post a Comment